காஞ்சிபுரத்தில் செங்கல் சூளைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட ஆர்டிஒ

காஞ்சிபுரத்தில் செங்கல் சூளைகளை ஆர்டிஒ ராஜலட்சுமி தீடிர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சிறிய ரக வாகனத்தை பறிமுதல் செய்தார்.

Update: 2021-08-04 12:00 GMT

செங்கல் சூளை பகுதிகளில் ஆய்வுமேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி பறிமுதல் செய்த வாகனத்துடன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு மற்றும் ஆற்றுப்படுகையில்   செங்கல் சூளைகள் அனுமதியின்றி செயல்படுகிறதா என்று  வருவாய் கோட்டாச்சியர் ராஜலட்சுமி தீடிர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறிய ரக வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப் படுகைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக வருவாய்த்துறை அனுமதி இன்றி இயங்கும் செங்கல் சூளைகளை ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் , வாலாஜாபாத் , உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி மேல்கதிர்பூர், கீழம்பி , மங்கல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் .

அப்போது சட்டவிரோதமாக செயல்பட்ட செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த வாகனத்தை ஓட்டுநர் எடுத்துச் செல்ல முயன்றபோது சுற்றிவளைத்த வருவாய்த்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.வாலிபர் தப்பி ஓடினார்.

மேலும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்தில் செங்கல் சூளைகள் அமைக்க வருவாய்த்துறை அனுமதி கட்டாயம் அவசியம் எனவும் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அங்கு பயன்படுத்தபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் வருவாய் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News