மீன்வளத்துறையை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகம் முன் பொதுமக்கள் தர்ணா

மீன்வளத்துறையால் விடப்பட்ட மீன் வளர்ப்பு குத்தகையை பொதுப்பணித்துறை கணக்கில் கொண்டுவரக்கோரி கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-24 07:00 GMT

பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்திய JE மார்க்கண்டேயன்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி‌உள்ளது. இதன் மூலம் 1800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு மீன்வளத்துறை சார்பில் வேலையில்லா பட்டதாரிகள் ஒருங்கிணைந்த கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்ப்பில் ஈடுபட அரசு தீர்மானித்தது.

அவ்வகையில் மாவட்ட ஆட்சியரின் தலைவராகக் கொண்ட இக் குழுவின் பரிந்துரையை ஏற்று ஊத்துக்காடு ஏரி வெங்கடேசன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு பருவ மழைகளும் ஏறி இறங்கிய காரணத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பயிர் செய்துவரும் நிலையில் மீன்பிடித்ததாக கூறி நீரை வெளியேற்றுவதும் மதகு கரைகளை சேதப்படுத்தி  வருவதாகக் கூறி கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் இன்று தாலுக்கா அலுவலகத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தின் வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் இளநிலை பொறியாளர் மார்க்கண்டேயன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

கிராம மக்கள் பல பேர் வேலை இல்லாதபோது முறைகேடாக இந்த குத்தகை பெறப்பட்டதாகும், பெரிய அளவிலான படகுகளைக் கொண்டு ஏரிக்கரைகளில் சேதப்படுத்தி வருவதும், மீன் வளர்ப்பிற்கு ஆக கழிவுகளை ஏரியில் கொட்டி அசுத்ததன்மை ஏற்படுத்துவதாகும் இதைத் தவிர்க்கவே மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கும்  ஏரி மீண்டும் பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என இக் கோரிக்கை வைத்துள்ளோம் என கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News