காஞ்சிபுரம் மாநகராட்சியில் திங்கள் தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் மாமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக வழங்கலாம்.

Update: 2022-03-20 04:45 GMT

பைல் படம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான டன் கழிவுகள்  தூய்மை பணியளார்களால் சேகரிக்கபட்டும் , குடிநீர் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதியதாக மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பின் புதிய மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மேயராக திருமதி மகாலட்சுமியுவராஜும்,  துணை மேயராக குமரகுருநாதனும் பதவியேற்றனர்.

பதவியேற்புக்கு பின் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் பணிபுரிவார்கள் என மேயர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக மாநகராட்சியின் ஐம்பத்தொரு வார்டு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை தோறும் மன்ற வளாகத்தில் சந்தித்து தங்கள் குறைகளை பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம் என இன்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்துள்ளார்.

இன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நீரேற்று நிலையத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட பின் இந்த ஆலோசனையை தெரிவித்ததன் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் போல் இந்த மனுக்கள் பெறும் முகாம் மாநகராட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என மாநகராட்சி மேயர் மாகலட்சுமியுவராஜ்  தெரிவித்தார்.

Tags:    

Similar News