காஞ்சிபுரத்தில் இருந்து திருடர்களை ஓட விட்ட போலீஸ் எஸ்பி சுதாகர்

காஞ்சிபுரத்தில் சிசிடிவி கேமிரா அனைத்து பகுதிகளிலும் பொருத்தப்படுவதால் திருடர்கள் பயந்து ஓடுகின்றனர் என்று எஸ்.பி. சுதாகர் தெரிவித்தார்.

Update: 2021-08-26 14:15 GMT

வேதாச்சலம் நகரில் நவீன கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடக்கி வைத்து விவரங்களை கேட்டறியும் காஞ்சிபுரம் எஸ்.பி.எம்.சுதாகர்

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள  வேதாச்சலம் நகரில் குடியிருப்போர் நலச்சங்கம்  அமைந்துள்ளது.இப்பகுதியில் 250குடியிருப்புகளில் 350 குடும்பங்கள் வசித்து வருகிறது.

குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் வேதாச்சலம் நகரில் ரூ.8 லட்சம் செலவில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என  குடியிருப்போர் நலச்சங்கம் முடிவு செய்தது.

தற்போது முதற் கட்டமாக ரூ.6லட்சம் மதிப்பில் 13 தெருக்களில் 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது .இக்கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை காஞ்சிபுரம் எஸ்.பி.எம்.சுதாகர் இயக்கி வைத்து குடியிருப்புவாசிகள் இடையே உரையாற்றினார்.

அப்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதில் வேதாச்சலம் நகர் முன்னுதாரணமாக திகழ்வது மகிழ்ச்சியளிக்கிறது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும்,காவல்துறையினரின் பணிச்சுமையை வெகுவாக குறைக்கவும் சிசிடிவி பேருதவியாக இருந்து வருகிறது.

திருடர்கள் பயமின்றி முதியோர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உணர்கின்றனர். தற்போது வேதாச்சாலம் நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் இரவு நேரத்தில் தெளிவாக தெரியும் வகையிலும்,பதிவானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நவீன கேமராக்கள் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது கேமரா அமைப்பு அதன் தொழில்நுட்பங்களை கண்டு திருடர்கள் அஞ்சும் காலம் தற்போது உருவாகியுள்ளது எனவும் எஸ்.பி.எம்.சுதாகர் பேசினார்.

விழாவில் வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெ.பாஸ்கர், செயலாளர் எஸ்.வெங்கடேசன், பொருளாளர் டி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.எஸ்.முருகன், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் உட்பட காவல்துறை அதிகாரிகள்,வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News