காஞ்சிபுரம் மாநகராட்சி : இரு வார்டுகளில் பாமக வெற்றி பெற்று ஆறுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-02-22 14:15 GMT

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற இரு பெண் வேட்பாளர்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,  50 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 32 இடங்களை கைப்பற்றி அதிகப் பெரும்பான்மை பெற்றது.

இத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் பத்தாவது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சரஸ்வதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பானுமதியை விட 504 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இதேபோல் நாற்பத்தி இரண்டாவது வார்டில் போட்டியிட்ட சூர்யா தர்மராஜ்,  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மகேஸ்வரி காமராஜர் விட,  254 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். முதல்முறையாக  தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சியில் இரு பாட்டாளி மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பது அக்கட்சியினர் இடையே ஆறுதலை தந்துள்ளது.

Tags:    

Similar News