மண்ணெண்ணெய் வழங்கல் குறைவு .. பொதுமக்கள் குற்றச்சாட்டு.

உத்திரமேரூர் பகுதியில் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து விட்டதாக மக்கள் புகார்

Update: 2022-04-30 12:00 GMT

பாண்டவாக்கம் நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் பெற்ற மூதாட்டி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலை கடை என அழைக்கப்படும் ரேஷன் கடைகளில் அரிசி ,  பருப்பு ,  சர்க்கரை ,  மண்ணெண்ணெய்  உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இரு அட்டைதாரர்களுக்கு ஏற்ப பொருட்கள் பிரித்து வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் மனையின் அளவு பல வருடங்களாக குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது.கடந்த காலங்களில் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 லிட்டர் என வழங்கப்பட்டது மெல்ல மெல்ல குறைந்து தற்போது ஒரு லிட்டர் ,  அரை லிட்டர் என பிரித்து அளிக்கப்படுகிறது.

உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னவாக்கம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் 70 குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்க கடந்த மாதம் 30 லிட்டர் வழங்கிய நிலையில் இந்த மாதம் வெறும் 20 லிட்டர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.இதனால் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இன்று கடந்த மாதம் வாங்காமல் இருந்த வர்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே  வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கு இந்நிலையில் நீடிப்பதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.மத்திய அரசு தொகுப்பிலிருந்து மாநில அரசுக்கு வழங்கப்படும் அளவு குறைவே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.



Tags:    

Similar News