வடக்கா ? தெற்கா ? மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவது யார் ? .

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற போவதில் திமுக வடக்கா அல்லது தெற்கு மாவட்டதினரா என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-21 05:30 GMT

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் வாக்குபதிவு  நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 12ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு திமுக கூட்டணியில் போட்டியிட்ட 11 நபர்களும் வெற்றி பெற்றனர். இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில்  6உறுப்பினர்களும் , வடக்கு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களும் அடங்குவர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும் , மதிமுக சார்பில் ஒருவரும் , காங்கிரஸ் சார்பில் ஒருவரும் உள்ளனர்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கு வடக்கு மாவட்ட திமுகவை சேர்ந்த படப்பை மனோகரனும் ,  தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நித்யா சுகுமாரும்  ஆகியோருடையே கடும் போட்டி நிலவுகிறது.

நாளை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்  நடைபெறவுள்ளதால் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News