நல வாரியம் அமைக்க கோரி ஊரக தொழில் துறை அமைச்சரிடம் மின்னணு,மின் தொழிலாளர்கள் மனு

அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பராமரிப்பு வேலைகளையும் அளித்தால் வாழ்வாதாரம் சிறக்கும் எனவும் கோரிக்கை

Update: 2021-07-30 14:00 GMT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஒரு கோடி மதிப்பீட்டில் 1632 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இவ்விழாவில், தமிழ்நாடு மின்னணு மற்றும் மின் தொழிலாளர் வடக்கு மண்டல சங்கம் சார்பில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்னணு மற்றும் மின் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்களின் வாழ்வாதாரம் காக்க புதிய தனி நல வாரியம் அமைக்க கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர்.

மேலும், அரசு சார்ந்த துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பராமரிப்பு வேலைகளையும் தங்களுக்கு அளித்தால், வாழ்வாதாரம் சிறக்கும் எனவும் கோரிக்கை வைத்தனர். இம்மனு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சங்க நிர்வாகிகளிடம்  ஊரக தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன்  தெரிவித்தார்.

Tags:    

Similar News