₹2 கோடியில் புதிய மின்மாற்றி, இயக்கத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் அருகே ₹ 2 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-04 08:30 GMT

காஞ்சிபுரம் அருகே ரூ 2 கோடியில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ் பார்மரை எம்எல்எ எழிலரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் நகரின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அருகிலுள்ள கிராமங்கள் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு குடியேற ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த பகுதியில் காஞ்சிபுரம் அருகில் இருப்பதால் அப்பகுதியில் புதிய குடியிருப்புகள் ஆயிரக்கணக்கில் தோன்றியுள்ளது.


இந்நிலையில் இங்கு உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து இவர்களுக்கு தேவையான மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும் உபயோகம் இன்மை அதிகம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அங்கு பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் எழிலரசன் அப்பகுதிக்கு புதிய மின் மாற்றி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதனடிப்படையில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான புதிய மின் மாற்றி மின்வாரியத்தில் இருந்து பெறப்பட்டு துணை மின்நிலையத்தில் நிறுவப்பட்டு பல கட்ட சோதனைகள் நடைபெற்றது.

இன்று இதனை மக்கள் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் பேசுகையில் மின்சாரத்தை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டுமெனவும்‌, அனைவரும் முககவசம் ,  தடுப்பூசி போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்‌ எனவும் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் திமுக நிர்வாகிகள் மின்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News