காஞ்சி மாநகராட்சியில் புதிய பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் இயந்திரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

Update: 2024-02-03 09:15 GMT

ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட புதிய பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் இயந்திர வாகனத்தை தொடங்கி வைத்த  எம்எல்ஏ சுந்தர் ,  எழிலரசன் மற்றும் மேயர் மகாலட்சுமி யுவராஜ்

ரூ 75.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் இயந்திர வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.பி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் துவக்கி வைத்தனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஒன்றாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் சுமார் 3 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி பொதுமக்களுக்கு குடிநீர், சுகாதாரம் மின்விளக்கு மற்றும் பாதாள சாக்கடை மூலம் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாநகராட்சியில் கழிவுநீர் அடைப்பு வாகனம் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதல் புகார்களை உடனடியாக சரி செய்யும் நோக்கிலும் தற்போதைய விஞ்ஞான பயன்களுக்கு ஏற்ப தற்போது மாநகராட்சிக்கு அதி நவீன திறன் சக்தி கொண்ட புதிய அடைப்பு நீக்கும் இயந்திர வாகனத்தை சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காக வாங்கியுள்ளது.

இன்று இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இவ்வாகனத்தினை சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த புதிய வாகனம் 8000 லிட்டர் கழிவு நீரை கொள்ளளவாக கையாளும் அமைப்புடன், அதிநவீன கூடுதல் திறன் கொண்ட உறிஞ்சிக் குழாய் உள்ளதாகவும், விரைவில் அடைப்புகளை களைய உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கழிவுகள் அல்லாது மணல் போன்ற பொருட்களையும் அதில் நவீனமாக உறிஞ்சும் தன்மை கொண்ட இயந்திரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது புதிய குடியிருப்பு பகுதிகளுக்கும் இணைப்பு பெற்றுவரும் நிலையில் , கூடுதல் புதிய பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் விரிவு படுத்தப்படும் நிலையில் இந்த இயந்திரப் பயன்பாடு அதிக பயன்படும் என மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News