புதிய காவல் ரோந்து வாகனங்கள் - எஸ்.பி துவக்கி வைத்தார்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ரோந்துப்பணிக்கென 5 புதிய காவல் வாகனங்களின் பயன்பாட்டினை, காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா துவக்கி வைத்தார்.

Update: 2021-04-29 06:13 GMT

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, விபத்து நேரங்களில் தக்க உதவிகள், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைகளை கண்காணிக்க, காவல் ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது வந்தது.

அத்தகைய வாகனங்கள் பல வருடங்களாக பயன்பாட்டில் உள்ளதால் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 2 , செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 3 என ஐந்து புதிய ரோந்து காவல் வாகனங்கள் வாங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கொடியசைத்து, புதிய வாகனங்களை பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News