குடிநீர் தேவைக்காக புதிய ஆழ்துளை கிணறு பணி தீவிரம்..

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-11 04:45 GMT

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புற நோயாளிகளாக வரும் , நூற்றுக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படுவதால் நோயாளிகளின் உறவினர்களும் கூடுதலாக தங்கியுள்ளனர். புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டு வருவதால் இவை அனைத்திற்கும்  குடிநீர் , கழிவறை பயன்பாட்டிற்கு போதுமான நீர் இல்லை என்பதும் கோடை காலம் என்பதால் கூடுதலாக போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கும் பணி துரிதப்படுத்த பட்டுள்ளது.

இதற்காக இரு ஆழ்த்துளை கிணறு  அமைக்கப்பட்டு விரைவில் நீர் பற்றாக்குறை போக்கிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags:    

Similar News