காஞ்சிபுரத்தில் எஸ்.பி.,யிடம் பாதுகாப்பு கேட்ட மாமன்ற உறுப்பினர்கள்

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்துகொள்ள உள்ள அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறையிடம் நேற்று இரவு மனு அளித்தனர்.

Update: 2023-07-28 01:00 GMT

நேற்று நடைபெற்ற மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலை புறக்கணித்து மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாள்தோறும் பொது மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. இது மட்டும் இல்லது மாதாந்திர கூட்டம் நடத்தி மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான பணிகளை செய்ய கோரிக்கைகளாக தெரிவித்து அதனை மாமன்ற ஒப்புதலுடன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி  மன்றத்தில் அதிமுக , பாஜக, த.மா.க , உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்கள் இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வார்டு பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் மற்றும் நலத்திட்ட பணிகளையும் செய்யாமல் புறக்கணித்து வருவதாக மாமன்றத்திலும் மட்டுமல்லாது பல்வேறு கூட்டங்களிலும் அதிமுக உள்ளிட்ட பல மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நேற்று காலை துவங்கிய நிலையில், இதனை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாகவும், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பலர் தங்களை அவதூறாக பேசுவதாகவும் குறிப்பாக பெண் கவுன்சிலர்களை ஒருமையில் பேசுவதாகவும் கூறி முழக்கங்கள் இட்டவரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன் நாள் மாநகராட்சியில் வழங்கிய குழுப் பணிகளை தாங்கள் ராஜினாமா செய்வதாக கூறி கமிஷனர் கண்ணனை சந்தித்து தெரிவித்த போது அவர் சமரசம் செய்து அனைத்தும் விதிகளின்படி நடைபெறும் எனவும் தங்கள் பகுதிகள் புறக்கணிக்கப்படவில்லை எனவும் தெரிவித்ததன் பேரில் சமாதானம் அடைந்தனர்.

இந்நிலையில் இன்று மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி சுதாகர் இடம் கோரிக்கை மனுவினை இக்குழுவினர்.அளித்தனர்.

இம்முனுவில் மாநகராட்சியில் கூட்டத்தில் பேசும் பெண் உறுப்பினர்களை இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் ஒருமையிலும் மற்றும் அவதூறாக பேசுவதால் அவர்களுக்கு மீது நடவடிக்கை எடுக்கவும், கூட்டத்தில் கலந்து கொள்ள தங்களுக்கு அச்சம் உள்ளதால் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் இக்கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாமன்ற கூட்டத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனவும், மாநகராட்சி மக்கள் நல திட்டங்களை செய்யாமல் தங்கள் பகுதிகளை புறக்கணிப்பதாகவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News