காஞ்சியை கலங்கடித்த மாண்டஸ் புயல்: வேரோடு சாய்ந்த மரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 802 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Update: 2022-12-10 04:45 GMT

காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை அருகே உள்ள வசந்தா அவின்யு குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை  நீர்.

வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்திருக்கிறது.  சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

நேற்று மாலை முதலே பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கி அதிகாலை வரை கனமழை மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்

காஞ்சிபுரம் - 184.90 மி.மீ

வாலாஜாபாத் - 91.80 மி.மீ

உத்திரமேரூர் - 138.00 மி.மீ

ஸ்ரீபெரும்புதூர் - 133.00 மி.மீ

குன்றத்தூர் - 147.40 மி.மீ

செம்பரம்பாக்கம் - 107.20 மி.மீ

மொத்தம் - 802.30 ,:சராசரி - 107.20

செம்பரம்பாக்கம் பகுதியில் அதிக கன மழை பெய்த போதிலும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியிலிருந்து தற்போது 100 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வள்ளல் பச்சைப்பன் தெரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் சாலையோரம் இருந்த பல மரங்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.

பல இடங்களில் மின்கம்பம் மீது மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பங்களும் சேதமடைந்தது. அதிக காற்று வீசுவதால் நேற்று இரவு 10 மணி முதல் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.

மாநகராட்சி அதிரடி : 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வள்ளல் பச்சையப்பன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனைக் குறித்து தகவலறிந்த விரைந்து வந்து பேரிடர் மீட்பு குழுவினர்,மாநகராட்சி பணியாளர்கள்,நெடுஞ்சாலை துறை ,மின்சார துறை ஊழியர்கள்,தீயணைப்பு துறையினர் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள்,உடனடியாக விரைந்து வந்து சாலைகளில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் ,மரங்களை அகற்றி பொதுமக்கள் இடையூறு ஏற்படாமல் போக்குவரத்தை சரி செய்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருகிலிருந்த  50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளிலில் நீர் புகுந்தது.

இதேபோல் மிலிட்டரி சாலையில் அருகில் உள்ள வசந்தாவின் குடியிருப்பு பகுதிகளும் நீரில் மூழ்கி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 146 ஏரிகள் முழு கொள்ளளவையும் , 84 ஏரிகள் 75% தாண்டியும் , 123 ஏரிகள் 51% தாண்டி உள்ளது.

இதே போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 64 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 676 குடும்பங்களை சேர்ந்த 2236 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு  வழங்கி மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News