காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் தடுப்பூசி வாகனம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதின் மூலம் கொரோனா தடுப்பு ஊசி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தது.

Update: 2021-07-11 06:30 GMT

நடமாடும் தடுப்பூசி வாகனத்தின் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இளைஞர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  வேகமாக பரவி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் பரவலை தடுக்கும் வகையில் மத்திய,  மாநில அரசுகள் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்ட நிலையில்,  மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  அறிமுகப்படுத்தி வைத்தார்.

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இவ்வாரம் அறிமுகபடுத்தியலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பணிபுரியும் கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளருக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் சந்தை அருகே நடைபெற்றது. இதன் மூலம் இவ்வாகனம் செயல்பாட்டிற்கு வந்தது.

இதில்  காய்கறி சந்தையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இன்று 100 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது மேலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை கொண்டு மீண்டும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News