மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் எம்எல்ஏ

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை, உணவு பொட்டலங்களை, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்.

Update: 2021-11-09 10:30 GMT

காஞ்சிபுரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ எழிலரசன் மற்றும் திமுகவினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து,  ஏரிகள் நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர் மழையால் பாலாறு, செய்யாறு உள்ளிட்டவற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால்,  கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆபத்தான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  தங்குவதற்கு, சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கேற்ப, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டவாக்கம் கீழம்பி ,  திருப்புக்குழி உள்ளிட்ட பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, போர்வை அரிசி மளிகைப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றை, திமுகவினர் வழங்கினார்.

திருப்புகுழி இருளர் குடியிருப்பில்,  காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின் கீழம்பி பகுதியில் இருளர் குடியிருப்பை சேர்ந்த 40 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில்,  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து அதனையும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.செல்வம் , காஞ்சி ஒன்றியக்குழு தலைவர் மலர்கொடி குமார், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், மாவட்ட பிரதிநிதி எம் எஸ் சுகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்,  ஊராட்சி மன்றத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News