மாவட்ட ஆட்சியர் முன், வணிகர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆட்சியர் முன்னிலையில் புகையிலை விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Update: 2021-07-27 08:00 GMT

காஞ்சிபுரம் ஆட்சியர் முன் உறுதிமொழி ஏற்கும் வணிகர்கள்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதால் பல ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என மருத்துவத் துறை எச்சரித்தது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களாகவே சிறிய பெட்டிக்கடை முதல் பெரும் வணிக வரி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் மற்றும் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவு வணிகர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதோ , பயன்படுத்தவோ நானும் என் பணியாளர்களும் ஈடுபட மாட்டோம் எனவும் , புற்றுநோய் வராமல் காப்போம் என உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் அனுராதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வ.மகாராணி, செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் திவாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News