காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம்

காஞ்சிபுரம் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடி அமைப்பது குறித்து, மாவட்ட கலெக்டர் அனைத்து கட்சியினரிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

Update: 2021-08-07 07:15 GMT

காஞ்சிபுரத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி பேசுகிறார் .

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிடப்பட்டார்.

இப்பட்டியலில் உள்ள குறைகள்,  ஆட்சேபனைகள் உள்ளிட்டவைகளை தெரிவிக்கும் வண்ணம் இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனா கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் மாற்றம் மற்றும் தேவைகள் குறித்து கோரிக்கைகளை வைத்தனர்.

சில வாக்குச்சாவடிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளதாகவும் சில வாக்குசாவடிகளில் வாக்களிக்க தூரங்கள் அதிகம் இருப்பதாலும் அதை மாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News