கோவிந்தவாடி அகரம் அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைக் காண சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-11-01 10:30 GMT

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மேகாத்த  அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார் என்கின்ற மேகாத்தம்மன் திருக்கோவிலில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார் என்கின்ற மேகாத்தம்மன் திருக்கோவிலில் பல ஆண்டுகளாக சிறுகோவிலாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதியதாக புதுப்பிக்கப்பட்ட மூலவர் மேகாத்தம்மன், மற்றும் கூடுதலாக சப்த கன்னி கோவில் மற்றும் நவக்கிரக கோவில் ஆகியவைபுதியதாக நிறுவப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது.

அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.


அருள்மிகு ஸ்ரீ மேகாத்தம்மனுக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாவைக் காண சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுங்க்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்

Tags:    

Similar News