90 சதவீதத்திற்கு மேல் பணி முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு

Kanchipuram District Collector -வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமில் சிறப்பாக செயல்பட்ட வாக்கு சாவடி அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

Update: 2022-09-19 08:15 GMT

 வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு 90% மேல் பணிமுடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி.

Kanchipuram District Collector -காஞ்சிபுரம்- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு 90% மேல் பணிமுடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 260 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 15 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.41,200/- மதிப்பிலான காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் வழங்கபட்டது.

மேலும், வக்காளர் பட்டியலை 100% துய்மையாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டு 90% மேல் பணிமுடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்டகலெக்டர் ஆர்த்தி வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் .கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News