தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வணிகர்கள் கோரிக்கை

தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவினை அதிகரிக்க வேண்டும் என வணிகர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2021-05-05 12:30 GMT

தமிழ்நாடு மண்ணெண்ணெய் மொத்த வணிகர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வழங்கி வந்த நிலையில் சென்ற ஏப்ரல் மாதத்தில் மறுபடியும் குறைத்து மாதத்திற்கு 7000 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர் இதனால் குடும்ப அட்டைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் 3 லிட்டருக்கு பதில் அரை லிட்டர் மட்டுமே வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு 35 ஆயிரம் கிலோ லிட்டர் தேவை இருக்கும் போது மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கிலோ லிட்டர் வழங்குவதால் பெரும் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டின் அளவை 35 ஆயிரம் கிலோ லிட்டருக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News