காஞ்சிபுரம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் தீவிர கொரோனா தடுப்பூசி போடும் பணி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் சுகாதார துணை இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தியது. இதில் மூத்தோர் , இளைஞர்கள் , பெண்கள் என ஏராளமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Update: 2021-05-28 13:30 GMT

வாலாஜாபாத் ஒன்றத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்ற காட்சி.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் ஒழித்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தென்னேரி, மஞ்சுமேடு, வாரணவாசி மற்றும் தொள்ளாழி ஊராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

இதில் பொதுமக்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்முகாமினை வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம் மற்றும் தங்கராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலாளர் சுஜாதா மற்றும் அரசு ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News