காஞ்சிபுரம்: தட்டச்சு பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.

Update: 2021-06-01 08:00 GMT
தமிழ்நாடு தட்டசச்சி சங்கத்தினர் சார்பில் கொரோனா நிவாரண நிதி வழங்கியபோது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு அதிகளவில் நிதியுதவி தேவை படுவதாகவும் பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வகையில் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட  தட்டச்சு மற்றும் கணினிகள் பள்ளிகள் நடத்திவரும் நிர்வாக  சங்கங்களின் சார்பில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் அச்சங்க நிர்வாகிகள்  அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News