காஞ்சிபுரம் ‌‌ : கூரம் ஏரியை கிராம மக்களுடன் இணைந்து பொதுப்பணித்துறை சீரமைப்பு

கூரம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-10-31 05:30 GMT

கூரம் ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொதுமக்கள், பொதுப்பணித்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் முதலில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாகவும கடந்த இரண்டு நாட்களாக சில மணி நேரம் கனமழை பெய்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் தற்போது 99 ஏரிகள் முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கரையில் ஒரு பகுதியில் கரை வலுவிழக்கும் நிலையில் உள்ளதாக அக்கிராம மக்கள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பொதுப்பணித்துறையினர் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்களுடன் இணைந்து மணல் மூட்டைகள் உடன் அப்பகுதியில் சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் சரியான தருணத்தில் பொதுப்பணித்துறை தங்களுடன் இணைந்து செயல்படுவதால் நீர் கசிவது வெளியேறுவது தவிர்க்கப்படும். இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News