காஞ்சிபுரம்: மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ...!சேதமடைந்த மின்கம்பத்தை மறைத்த ஊழியர்கள்...!!

மின்கம்பம் பழுது , மரக்கிளைகள் நீக்கம் என அடிப்படைகளை கூட செய்யாமல் புதிய மின்மாற்றிகளை அமைத்து அதை சட்டமன்ற உறுப்பினரை திறக்க வைத்த அவல நிகழ்வு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

Update: 2021-06-10 10:20 GMT

மின்மாற்றி அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்திருப்பதை எம்எல்ஏ பார்க்கக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் நாற்காலி கொண்டு மறைத்துள்ளதை காணலாம்.

காஞ்சிபுரம் நகரில் புதிய கட்டமைப்பு மற்றும் மின் சாதன பொருட்களின் அதிக பயன்பாடுகள் காரணமாக நகரில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைவழுத்த மின்சாரம் என பல தடைகளால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனைபோக்க புதிய மின்மாற்றிகள் அமைக்க காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பரிந்துரையின் பேரில் இரண்டு இடங்களில் புதிய கூடுதல் திறன் கொண்ட மின் மாற்றிகளை மின்சாரம் வாரியம் அமைத்தது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் மின்மாற்றி அருகே அமைந்திருந்த மின் கம்பம் சேதமடைந்து இருந்ததை எம்எல்ஏ பார்வையில் இருந்து மறைக்க பிளாஸ்டிக் நாற்காலி கொண்டு மின்சார வாரியம் மறைத்தும், அருகில் இருந்த மரத்தில் மின் ஒயர்கள் படர்ந்து இருந்ததை அகற்றாமல் மெத்தனமாக புது மின்மாற்றியை பயன்பாட்டிற்கு இயக்கினர்.

இந்த மின்மாற்றி அருகே அரசு கோவிட் கேர் சிகிச்சை மையம் அமைந்துள்ளது. அவ்வழியாக தொற்று பாதித்தவர்கள் சென்று மருத்துவர் ஆலோசனை பெற்று அந்தந்த மையங்களுக்கு செல்வது வழக்கம். இதுபோன்று சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றவும் அருகில் உள்ள மரங்களின் கிளைகளில் படாமல் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News