காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு... வெறிச்சோடிய சாலைகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-05-16 07:30 GMT

முழு ஊரடங்கு காரணமாக காஞ்சிபுரம் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் கடந்த மே 10ம் தேதி முதல் இரு வார ஊரடங்கு மே 24ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக வருத்தமடைந்த முதல்வர் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் இரு தினங்களுக்கு முன்பு ஊரடங்கு விதிகளை திருத்தம் மேற்கொண்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய தேவையான மருத்துவ வசதிகள் தவிர வேறு எதுவும் இயங்க கூடாது என உத்தரவிட்டு அதற்கான கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அவ்வகையில் காலை 5 மணி முதலே காவல்துறை ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து காஞ்சிபுரம் நகரின் இணைப்பு சாலைகள் முழுவதும் அடைக்கப்பட்டு காவல் பணியில் ஈடுபட்டனர்

மருத்துவ சேவைக்கு மட்டுமே செல்ல இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கபடுகிறது. நகர் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலை போல் தொடரும் நாட்களும் இருந்தால் காஞ்சிபுரம் நகரில் பரவிவரும் வைரஸ் பரவலை அனைவரும் அர்ப்பணிப்போடு கட்டுப்படுத்த முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்..

Tags:    

Similar News