காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-30 14:45 GMT

பைல் படம்

காஞ்சி மண்டல சரக டிஐஜி எம்.சத்யபிரியா  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவோரை  கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாகவே மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பல நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவ்வகையில் இன்று உத்திரமேரூர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு குற்றவாளிகளான வசீகரன்,  சரன்ராஜ் மற்றும் நிஷாந்த் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்  கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரகு மற்றும் பிரஷாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 110 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்னடத்தையுடன் செயல்பட சூர்யா மற்றும் கணேஷ் ஆகியோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News