காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு நால்வர் மல்லுக்கட்டு

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக பதவியை கைப்பற்ற ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் கடும் போட்டியில் உள்ளனர்.

Update: 2022-03-01 10:45 GMT

துணை மேயர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த நபர்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நிறைவுற்ற நிலையில் நாளை உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 51 உறுப்பினர்கள் கொண்ட மாமன்றத்திற்கு 50 உறுப்பினர்கள் மட்டுமே  தேர்வு செய்யப்பட்டனர். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக நிர்வாகிகள்‌,  மனைவிக்கு பெற்றுத்தர கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான தங்கள் விருப்பங்களையும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதேபோல்  துணை மேயர் பதவிக்கு ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் விருப்பம் தெரிவித்தனர். நகர மூத்த நிர்வாகியும் , முன்னாள் நகரமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவமும் கொண்ட சந்துரு , திமுக குடும்பத்தை சேர்ந்த வாழ.முனுசாமி பேரன் குமரன் மற்றும் தேனம்பாக்கம் சங்கர் மற்றும் பூங்கொடி தசரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் நகரினை பொறுத்தவரை முதலியார் வகுப்பை சேர்ந்தவருக்கு மேயர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக திமுகவினர் பேசி வருகின்றனர். அவ்வகையில் துணை மேயர் பதவி மற்றொரு பிரிவினரான வன்னியர் வகுப்பை சேர்ந்தவருக்கு‌ வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்முறை திமுகவில் வென்ற 90 சதவீதம் பேருக்கு மாநகராட்சி மண்டல குழுவில் பதவிகள் காத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News