காஞ்சிபுரம் சுகாதாரப்பணி துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-10-18 15:15 GMT

காஞ்சிபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ளது சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம். இதன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10பேர் கொண்ட  குழுவினர் அதிரடியாக அலுவலகத்தில் சோதனையிட்டபோது, துணை இயக்குனர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்த அலுவலக ஊழியர் மற்றும் துணை இயக்குநர் பழனியிடம், லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இணை‌இயக்குநர் பழனியிடமிருந்து 1,66,900 , வட்டார மருத்துவ ஆய்வாளர் சீனுவாசன் இடமிருந்து ரூ 26, 490 மற்றும் வட்டார மருத்துவ ஆய்வாளர் இளங்கோவின் மிகுந்து ரூ8900 என மொத்தம் ரூ2,02,290 கைப்பற்றப்பட்டுள்ளது. இப்பணம் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க இந்தத்தொகை பெறப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.


Tags:    

Similar News