காஞ்சிபுரம்: மாரகல் கிராம தொழிலாளர்களுக்கு கிரஷர் நிறுவனம் நிவாரண உதவி!

காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில் வேலையின்றி தவித்துவரும் தொழிலாளர்களுக்கு கிரஷர் நிறுவனம், நிவாரண பொருட்களை வழங்கியது.

Update: 2021-06-05 07:15 GMT
மாரகல் கிராமத்தில் கிரஷர் நிறுவனம் சார்பில் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள்.

காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட கல் அறவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் தினக்கூலியாக பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக பலர் தொழிலை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கிராமத்தில் தொழில் மேற்கொண்டு வருகின்ற கிரஷர் உரிமையாளர்கள், அக்கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தலா 25 கிலோ அரிசியை வழங்கினார்கள்.

இதனை இன்று உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக  ஒன்றிய செயலாளர் குமணன் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வீரராகவன் , கல்கிரஷர் உரிமையாளர் சங்கர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News