பாஜக வில் இணைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சுயேச்சை உறுப்பினர்

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 46 வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு‌ வெற்றி பெற்ற கயல்விழி சூசை பாஜக வில் இணைந்தார்

Update: 2022-05-26 06:30 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு பேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கயல்விழி சூசையப்பர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று 50 வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பெண் மாநகராட்சி மேயராக திருமதி மகாலட்சுமி யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 46 வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கயல்விழி சூசையப்பர். கடந்த மூன்று கூட்டங்களிலும் பொது மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தும்,  மாமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விளக்கினால் மட்டுமே பொதுமக்களிடம்‌ எடுத்து கூற இயலும் என பேசினார்.

கடந்த ஒரு மாத காலமாகவே இவரது வார்டு பகுதிகளில் முறையான தூய்மை மற்றும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும்,  இது குறித்து அனைத்து அதிகாரிகள் மற்றும் ஆணையாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில் திடீரென தனது கணவருடன் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளர் கே எஸ் பாபு வை சந்தித்து பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி பாஜாகவின் பலம் இரண்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News