காஞ்சிபுரம் குழந்தைகள் சிறப்பு மையம்: மாவட்ட நலக்குழுவினர் ஆய்வு!

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நல சிறப்பு மையத்தினை மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-06-02 14:15 GMT

காஞ்சிபுரம் குழந்தைகள் சிறப்பு மையத்தை மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த துறைகளுக்கு கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு அரசாணை அனுப்பப்பட்டது.

அதனை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் குழு ஏற்படுத்தப்பட்டது. அதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக அலுவலர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் உறுப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

 இந்தநிலையில், உத்திரமேரூரை அடுத்த விசூரில் இயங்கும் பாரதியார் தனியார் தொண்டு நிறுவன மையம் மற்றும் காஞ்சிபுரம் அடுத்த புத்தேரி பூங்காவனம் தொண்டு நிறுவன மையம் என மாவட்டத்தில் இரு மையங்கள் தயார் படுத்தப்பட்டது.அதனை குழுமத்தின் தலைவர் ந. இராமச்சந்திரன் பார்வையிட்டு அங்கு உள்ள வசதிகள், மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் குழுமத்தின் உறுப்பினரும் மாவட்ட பணிக்குழுவின் உறுப்பினருமான எஸ். சக்திவேல், தொண்டு நிறுவன மேலாளர் பிரேம் ஆனந்த், மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன், ஜான் பிரபு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர்கள் , தொண்டு நிறுவன முதன்மை மேலாளர் மோகனவேல், செல்வ குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News