காஞ்சிபுரம் : மே15வரை தொல்லியல் துறை கோயில்கள் மூடல்

தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்படும் திருக்கோயில்கள் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

Update: 2021-04-16 05:26 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மெல்ல மெல்ல கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, நேற்று மட்டுமே 253 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக,

மத்திய அரசின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருமுக்கூடல், தென்னேரி உள்ளிட்ட ஏழு பகுதிகளில் அமைந்துள்ள புராதான திருக்கோயில்கள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிட பட்டது. பூஜைகள் மட்டும் வழக்கம்போல் அர்ச்சகர் மேற்கொள்ளவார்கள் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News