காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரம் வாகன சோதனையில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-24 06:15 GMT

தீவிர வாகன சோதனையில் போலீசார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரவலைத் தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் போடப்பட்ட இருவார ஊரடங்கு உத்தரவு முடிவடைந்தது. இதையடுத்து ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என அறிவித்தார்.

தளர்வுகள் அற்ற ஊரடங்கில் மருத்துவம் பால், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு தேவையற்ற சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கபட்டது.

காஞ்சிபுரத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் வருவதைக் கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்பொழுது விதிகளை மீறி வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து செல்லப்பட்டு வாகனங்களில் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News