காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் நடாவி திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

சித்ரா பௌர்ணமி தினத்தன்று காஞ்சி வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் உள்ள பூமி மட்டத்தில் இருந்து 20 அடி ஆழமுள்ள கல் மண்டபத்தில் எழுந்தருள்வார்

Update: 2024-04-21 14:45 GMT

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசஞ்சீவிராயர் திருக்கோயில் மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி

காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் கிராமத்தில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமிக்கு அடியில் உள்ள நாடாவி கிணற்றில் காஞ்சி வரதராஜ பெருமாள் எழுந்தருளும் உற்சவத்திற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஐயங்கார்குளம் கிராமம்.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் வானிலை சாஸ்திரப்படி அமைக்கப்பட்டுள்ளது இங்குள்ள நடாவி கிணறு. இந்த கிணற்றுக்குள் இறங்க 36 படிகளைக் கடந்து பூமியின் மேல் பரப்பிலிருந்து கீழ் நோக்கி செல்லும் வகையில் அமைந்துள்ளது.

27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் பூமியின் மேல் பரப்பிலிருந்து படிக்கட்டுகளும் அதனைத் தொடர்ந்து ஒன்பது படிக்கட்டுகள் ஒன்றின் பின் ஒன்றாக கடந்து செல்லும் நிலையில் அழகிய மண்டபம் பூமிக்கு அடியில் சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது.

12 ராசிகளை குறிக்கும் வகையில் இந்த மண்டபம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் தனது வெப்பத்தை தணிக்க இந்த பூமிக்கு அடியில் உள்ள நடாவி கிணற்றிற்கு வந்து ஓய்வெடுத்து செல்வதாக புராணங்கள் கூறுகிறது.

நாடாவி கிணறு கல் மண்டபத்தை சுத்தப்படுத்தும் சென்னையை சேர்ந்த தன்னார்வலர்கள் குழு

அவ்வகையில் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள சித்ரா பௌர்ணமி தினத்தை ஒட்டி இங்குள்ள நடவி கிணற்றை தூய்மைப்படுத்தும் பணியில் சென்னையை சேர்ந்த தன்னார்வர்குழு மற்றும் ஐயங்கார் குளம் கிராம பொதுமக்கள் குழு இணைந்து இப்பணிகளை இன்று மேற்கொண்டனர்.

எப்பொழுதுமே இந்த நடாவி கிணற்றில் நீர் இருக்கும் நிலையில் அவை அனைத்தும் வெளியேற்றப்பட்டு புழுக்கள் பூச்சிகள் அழுக்குகள் அசுத்தங்கள் ஆகியவற்றை அகற்ற இந்த தூய்மை பணி நடைபெறும்.

ஐயங்கார்குளம் பகுதியில் அமைந்துள்ள நடாவி கல் மண்டபத்தை சுத்தம் செய்யும் தன்னார்வலர்கள்.

சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சி வரதராஜர பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஐயங்கார்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்ட பின் அங்கிருந்து புறப்பட்டு இந்த நடாவி கிணற்றில் சற்று நேரம் ஓய்வெடுத்த பின் மீண்டும் பாலாற்றில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு அதன் பின் அதிகாலை திருக்கோயிலை அடைவது வழக்கம்.

பூமிக்கு அடியில் சுமார் 20 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த கல் மண்டபத்தில் எழுந்திருளும் வரதராஜ பெருமாளை காண பல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News