காஞ்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் இன்று திமுக வேட்பாளர் செல்வம் எம்எல்ஏ எழிலரசன் , மேயர் மகாலட்சுமி உடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-03-31 13:30 GMT

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நகரில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெறும் இருக்கிறது.இதனையொட்டி தமிழக முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தாக்கல் செய்து இறுதி வேட்பாளர் பட்டியலானது வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதுமே வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களமானது சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணி திமுக கட்சி வேட்பாளர் சிறுவேடல் செல்வம் காஞ்சிபுரம் மாநகரப் பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

இதனையொட்டி சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அண்ணாவின் நினைவில் இல்லத்திலிருந்து வேட்பாளர் சிறுவேடல் செல்வம் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். டோல்கேட் பகுதியில் பெண்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


32 வார்டு நாகலுத்து தெரு பகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் அவர்களுக்கு திமுகவினர் வீட்டு மாடியில் இருந்து ரோஜாப்பூ பூக்களை தூவி மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும் திருகாளிமேடு பகுதியில் பிரச்சாரத்தின் பொழுது விக்னராஜர் விநாயகர் வருகை தந்த திமுக வேட்பாளர் செல்வம் கோவில் சார்பில் கும்பம் மரியாதை அளித்து பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர், கோவிலில் இருந்து சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டார்.

மேலும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல வேட்பாளர் செல்வம் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் சின்ன காஞ்சிபுரம் அமுதபடி தெரு அருகே வந்து கொண்டிருந்த போது அப்படியாக சென்ற சங்கரமட பீடாதிபதி விஜேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் வழியாக சென்றபோது காரை நிறுத்தி அவரிடம் குங்கும பிரசாதம் பெறுவதற்காக கவுன்சிலர் மற்றும் அறங்காவலர் குழு என திமுகவினர் வரிசை கட்டி நின்று பிரசாதம் வாங்க சங்கராச்சாரியாரும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி பிரசாதம் வழங்கினார்.

இந்த வாக்கு சேகரிப்பு பணியில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சுந்தர் , காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலரசன் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர், மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் இணைந்து இன்றைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News