ஓராண்டில் திமுக ஆட்சி மக்களுக்கு ஏமாற்றமே: ஜி.கே.வாசன் கருத்து

புதிய கல்வி கொள்கை குறித்த சந்தேகங்களை கேட்டறிதலும் , புதிய ஆலோசனைகளை கூறாமல் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது.

Update: 2022-06-02 15:30 GMT

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட தலைவர் ஜிகே வாசன் மணமக்களை வாழ்த்தினார்.  உடன் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் மற்றும் கார்த்திக்.

தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சிபுரம் மாவட்ட  நிர்வாகி இல்ல திருமணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு  மணமக்களை  வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.

இதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஓராண்டு திமுக ஆட்சியில்,  மக்கள் எதிர்பார்த்தது எதையும் நிறைவேற்றாமல் ஏமாற்றத்தையே கண்டனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக அரசு உள்ளது .

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டும் , புதிய கல்விக் கொள்கை வருங்கால மாணவர்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்டது எனவும், கல்வியாளர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் இதை அரசியலாக்குவது ஏற்புடையது அல்ல.

புதிய கல்விக் கொள்கைகள் குறித்த சந்தேகங்களை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ள நிலையிலும் , அதை பொருட்படுத்தாமல்  புதிய ஆலோசனைகளை வழங்காமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் , கல்வியை அரசியலாக்க ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் , கார்த்திக் உள்ளிட்ட நகர ஒன்றிய பேரூர் கழக தமாகா நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News