கொரோனாவில் தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இலவசம்‌

கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த +2 மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி படிப்பில் கட்டணம் இன்றி பயிலாம் என தனியார் தொழில்நுட்ப கல்லூரி அறிவிப்பு.

Update: 2021-07-21 07:15 GMT

பல்லவன் தொழில்நுட்ப கல்லூரி.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன்றி அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதில் பல குடும்பங்களில் தாய், தந்தையினரை இழந்ததால் கல்வி கற்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு +2  தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் உயர்கல்வியான தொழில்நுட்ப கல்வி,  பொறியியல், கலைகல்லூரிகளில் பயில விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில்  அமைந்துள்ள பல்லவன் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கையில்,  பெரும் தொற்றான  கொரோனாவில் தாய் ,  தந்தையை இழந்த மாணவர்கள் கல்வி கற்க வசதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு தங்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் இலவச கல்விக் கட்டணம் மற்றும் விடுதியில் தங்குவதாக இருந்தால் முழுவதும் கல்லூரி நிர்வாகம் ஏற்பதாக சேர்மன் மோதிலால் தெரிவித்துள்ளார். அனுமதி சேர்க்கைக்கு  94430 66131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தார்.



Tags:    

Similar News