ஏரிகளில் நீர் சேமிக்க ஆற்று உபரிகால்வாய் ஓட்டைகளை அடைக்கும் விவசாயிகள்

காவாந்தண்டலம் கிராம ஏரிக்கு செல்லும் கால்வாயில் உள்ள உடைப்புகளை விவசாயிகளே சீர் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-10-07 08:30 GMT

ஏரிக்கு நீர் வழிகளில் உள்ள ஓட்டைகளை சரி செய்யும் விவசாயிகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் அருகே செய்யாறு பாய்ந்து வருகிறது. இதில் கடந்த நான்கு தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நீர் வரத்து துவங்கியுள்ளது

இந்த செய்யாற்றில் குறுக்கே பல கோடி மதிப்பீட்டில் தடுப்பு அணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையை ஒட்டி உபரி நீர் காவாந்தண்டலம் கிராம ஏரிக்கு செல்லும் துணை கால்வாய் ஒன்று உள்ளது.

இதை பல ஆண்டுகளாக சீர் செய்யக் கோரி நிதி ஒதுக்கியும் முறையாக பணிகள் மேற்கொள்ளவும் கால்வாயை ஒட்டி உள்ள சிமெண்ட் கரையில் ஆங்காங்கே ஓட்டைப் எழுந்துள்ளதால் நீர் கசிந்து ஏரிக்கு செல்லும் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

இதைக்கண்ட காவாந்தண்டலம் கிராம விவசாயி குழுவினர் உடனடியாக உபரி நீர் பிரியும் பகுதியிலிருந்து ஏரிக்கு செல்லும் வரை ஆங்காங்கே ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய களத்தில் இறங்கி உள்ளனர்.

பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதாக விவசாயிகளே தற்போது இப் பணிகளை மேற்கொண்டு தமது கிராம ஏரிக்கு நீர்வரத்து கொண்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News