காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி

கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு நிலையில் காலநிலை மாற்றங்களால் கருதியதாக கூறப்படுகிறது.

Update: 2023-08-21 10:00 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் கருக்கி போனதால் இழப்பீடு வழங்க வேளாண்துறைக்கு பரிந்துரை செய்ய கோரிக்கை மனு அளிக்க கருகிய பயிருடன் வந்த விவசாயி  முனுசாமி.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் , கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய இரண்டு ஏக்கர் சொந்த நிலத்தில் சொர்ணவாரி பருவத்திற்கான நெல் பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டு வந்தார்.

இன்னும் அறுவடைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் 15 தினங்களுக்கு மழை மற்றும் வெயில் காரணமாக இரண்டு ஏக்கர் நெல் பயிர் முற்றிலும் கருகி சேதம் அடைந்துள்ளது.

இதனை கண்ட விவசாயி பெரிதும் மனம் உடைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நெற்கதிர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இடம் காண்பித்து வேளாண்துறை அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இம்மனு வேளாண்துறை அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டு பரந்தூர் வேளாண்மை உதவி அலுவலர் உரிய ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை எடுப்பார் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாய கூறுகையில் , இரண்டு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெல் காலம் நிலை மாற்றம் காரணமாக முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் உரிய இழப்பீடு கோரி மனு அளித்ததாக தெரிவித்தார்.

கருகிய பயிருடன் வந்த விவசாயியை பார்த்த பல்வேறு தரப்பினரும் , அதை எடுத்து வந்த விவசாயம் கவலை முகத்தினை பார்த்த பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Tags:    

Similar News