ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலையை தி.மு.க.வினர் வழங்கியதால் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே நியாய விலை கடையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-24 06:48 GMT
காஞ்சிபுரம் அருகே ரேஷன் கடையில் தி.மு.க. வினர் இயந்திரத்தை கையாண்டனர்.

காஞ்சிபுரம் அடுத்து அமைந்துள்ளது ஐயங்கார் குளம் கிராம ஊராட்சி. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் சுமார் 1300 குடும்ப அட்டைகள் உள்ளது.

இந்நிலையில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி சேலை வருடம் தோறும் வழங்கப்படுவது வழக்கம் அவ்வகையில் ஐயங்கார்குளம் கிராம ஊராட்சியில் உள்ள நியாய விலை கடை ஊழியர் வெங்கடேசன் மூலம் நியாயவிலைக் கடைகளில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

வெங்கடேசன் நியாய விலைக்கடை அரசு பதிவு இயந்திரத்தை தி.மு.க.வினரிடம் அளித்து விட்டு வெளியே சென்ற நிலையில் அங்குள்ள கிராம அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் அமர்ந்து இலவச வேட்டி சேலை வழங்கியதால் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாசுந்தரமூர்த்தி மற்றும் அ.தி.மு.க.வினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News