கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு என மாவட்ட ஆட்சியரிடம் புகார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் கல்குவாரிகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-03-25 08:30 GMT

கிராமத்தில் பயிரிடப்பட்ட செடிகளில் கல்துகளின் தூசு படிந்து காணப்படும் பயிர் வகைகள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சிறுதாமூர் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கல் குவாரி இயங்கி வருவதால் இந்த பகுதியில் மறு உற்பத்தி செய்யமுடியாத பசுமை போர்த்திய மலைகள் மரங்கள் அழிந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று அக்கிராம சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இக் கல்குவாரிகளால் விவசாயம் குடிநீர் ஆடு மாடுகள் அனைத்தும் அழிந்து வருகின்றன. மேலும் இந்த கல் குவாரிகளுக்கு செயல்படும் கனரக லாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகன விபத்தில் சிக்கி  உடல் உறுப்புகளை இழந்து உள்ளனர் எனவும், உடனடியாக சுற்றுச்சூழல் கருத்தில் கொண்டு சிறுதாமூர் ஊராட்சியில் செயல்படும் கல் குவாரிகளில் கிரஷர்களையும் சிறப்பு கிராம சபை கூட்டி அனைத்து தொழிற் சாலைகளில் மூட தீர்மானம் நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சி பிரதிநிதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் இப்பகுதியில் அமைய எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

படவிளக்கம் : 

Tags:    

Similar News