ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியுள்ளது.

Update: 2023-03-26 02:30 GMT

காஞ்சிபுரம் ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கிய போது

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் எண்ணற்ற திருத்தலங்கள் பரிகார தலங்களாகவும், புகழ்பெற்ற திருத்தலங்கள் ஆகும் விளங்கி வருகிறது.

அவ்வகையில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான மண் ஸ்தலம் என அழைக்கப்படும் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஆகும். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருக்கோயிலின் வருடாந்திர பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவிற்கா திருக்கோயில் சார்பில் மிகப்பெரிய பந்தல் மற்றும் அலங்காரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு வசதிக்காக குடிநீர் பாதுகாப்புக்காக காவல் துறையின் சிறப்பு அரங்கம் மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை விநாயகர் காஞ்சிபுரம் நகர வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துடன  பிரம்மோற்சவ விழா  தொடங்கியது.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் விநாயகர் , முருகர்,  அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கொடி மரம் அருகே எழுந்தருள நவ கலசங்கள் சிவாச்சாரியார்கள் அமைத்து பூஜைகளுடன் கொடியேற்ற விழா தொடங்கியது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும், திருக்கல்யாண பிரம்மோற்சவ கொடியேற்ற விழா தொடங்கியது. இதன்பின் சரியாக 5.10 மணி அளவில் சிவ பூத கனவாத்தியங்கள் ,  மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஓம் நமசிவாய என முழக்கம் இட கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து பாலமுருகன், விநாயகர், ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆகியோருக்கு சிறப்பு தீப ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்ற பக்தர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள் காலை மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் அருள்மிகு ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்த பிரம்மோற்சவம் விழாவில் முக்கிய நிகழ்வுகளாக 63 நாயன்மார்கள் வீதி உலா , மாலை வெள்ளிரதம், மரத்தேர் திருக்கல்யாணம் , ராவணவஸ்வரர் உற்சவம் என பல புகழ் பெற்றது.

பிரமோற்சவ கொடியேற்ற விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்

காலை சப்பர வாகனத்தில் அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் நகர வீதியில் வலம் வர உள்ளார்.

Tags:    

Similar News