காஞ்சிபுரத்தில் நியாய விலை கடை திறப்பு நிகழ்ச்சி:எம்.எல்.ஏ. பங்கேற்பு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டில் நியாய விலை கடையைசட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

Update: 2022-07-13 07:26 GMT

காஞ்சிபுரத்தில் ரேஷன் கடையை திறந்து வைத்து அரிசி வினியோகம் செய்தார் எழிலரசன் எம்.எல்.ஏ.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் அங்கன்வாடி மற்றும் நியாயவிலைக் கடைகளை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு பகுதியான கிழக்கு ராஜ வீதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட  இந்த நியாய விலை கடைகளில்  805 குடும்ப அட்டைகளுக்கு தடையின்றி பொருட்கள் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.இதேபோல் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களான சுண்டல்,  வேர்க்கடலை உருண்டை,  எள்ளுருண்டை மற்றும் எழுது பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.

அங்கன்வாடி சுவர் முழுவதும் குழந்தைகள் உருவப்படங்கள் , கார்ட்டூன் ஓவியங்கள் , காற்றோட்டமான வசதி என அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் மண்டலகுழு உறுப்பினர்கள் , மாமன்ற உறுப்பினர்கள் , தி.மு.க. நகர செயலாளர் சண்பிராண்ட் ஆறுமுகம் , தி.மு.க. பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில்  அங்கன்வாடி மற்றும் நியாயவிலைக் கடைகளை  சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News