சித்திரம் பேசுதடி: பிரமோற்சவ விழாவினை நேரடியாக ஓவியமாக்கும்‌ ஓவிய ஆசிரியர்

காஞ்சிபுரத்தில் வசிக்கும் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்த்குமார் காமாட்சி அம்மன் கோயில் பிரமோற்சவ விழாவினை ஓவியமாக வரைந்து‌ வருகிறார்

Update: 2023-03-01 01:00 GMT

காஞ்சி காமாட்சி அம்மன் பிரம்மோற்சவ விழாவில் நிகழ்வு இடத்திலேயே ஓவியமாக வரையும் ஓவிய ஆசிரியர் ஆனந்தகுமார்

காஞ்சிபுரம் பிரம்மோற்சவ விழாக்களின் நிகழ்வுகளை நிகழ்விடத்திலேயே ஓவியமாக்கி ஆவண படுத்தி வரும் காஞ்சி ஓவிய ஆசிரியர் ஆனந்தகுமார் செய்கை பக்தர்கள்‌உள்ளிட்ட அனைவரின் பாராட்டு பெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓவிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆனந்தகுமார், எனது மனைவி மற்றும் ஆறு மாத குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து நமண்டி அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

சிறு வயது முதலே ஓவியத்தின் மேல் தீராத ஆசை கொண்டு தனது பள்ளி படிப்பு முடித்தவுடன் ஓவிய ஆசிரியர் ஒருவரிடம் உதவியாளராக இருந்து கொண்டு சென்னை ஓவியக் கல்லூரியில் முதுகலை ஓவியம் பெற்றுள்ளார்.

கல்வி படிப்பிலேயே நிகழ்விடங்களில் ஓவியம் வரையும் பாடத்தை சேர்த்து தேர்வு செய்து அதற்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு சிறிது சிறிதாக சென்னையில் உள்ள பழைய கட்டிடங்கள் ஓவியங்களை வரைந்து காட்சி படுத்தி உள்ளார்.


அதனைத் தொடர்ந்து வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டு கலை மற்றும் வரலாற்று நினைவுகளை தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை உள்ள அனைத்து நிகழ்வு இடங்களையும் பதிவு செய்து அங்கேயும் கண்காட்சி நடத்தியுள்ளார்.

இந்நிலையில் கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பெருமைகளும் வரலாற்று திருக்கோயில்களையும் தற்போது ஓவியத்தின் மூலம் பென்சில் ட்ராயிங் , வாட்டர் பெயிண்ட் உள்ளிட்ட பல வகைகள் மூலம் உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலின் மாசி மக பிரம்மோற்சவ விழா கடந்த நான்கு தினங்களாக நடைபெற்று வருகிறது.


திருவிழாவை நேரில் கண்ட ஓவியர் ஆனந்தகுமார், காமாட்சி அம்மன் உருவம் மற்றும் மாலைகள் ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவைகளின் ஈர்ப்பால் அதில் தனது ஆர்வத்தை திருப்பி இன்று காலை நடைபெற்ற விழாவினை நேரடியாக ஓவியத்தின் மூலம் வரைந்து வருவதை பார்க்க பக்தர்கள் பொதுமக்கள் அவர்களின் திறமை மற்றும் ஓவியத்தினை பெரிதும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆனந்தகுமார் கூறுகையில் , எனது தாயாரின் உந்துதல் மற்றும் ஓவிய குருவின் பயிற்சி உள்ளிட்டவைகளால் தான் சிறந்து விளங்குவதாகவும், இது போன்ற நிகழ்வு விட ஓவியங்கள் வரைவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும்.

தற்போது காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ வரைந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கும். சிலை மற்றும் உருவங்களை உள்ள அடிப்படை கொண்டு வரைவதைவிட நிகழ்வு இடத்தில் பார்க்கும் அனைத்து காட்சிகளையும் ஒருங்கிணைத்து அதன் அழகை வரைவது பெரும் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Tags:    

Similar News