காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிப்பு ஏன் தெரியுமா?

குப்பை கிடங்கு தீயை அணைக்க தவறிய காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-04-11 09:36 GMT

தீ பிடித்து எரிந்த இடத்தை மேயர் மகாலட்சுமி ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கடந்து மூன்று நாட்களாக இரண்டு பகலாக தொடர்ச்சியாக குப்பை எரிந்து வருகின்றது. தீயை அணைக்காமல் மெத்தனமாக இருந்ததால் மாசு கட்டுபாட்டு வாரியம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மூன்று நாட்களாக எரியும் குப்பையை ஏன் அணைக்கவில்லை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லையா? என கேள்வி எழுப்பிய மேயர்  மெத்தனமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

மேலும் இனி வரும் காலங்களில் குப்பை எரிந்தால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிவாசிகள் பாதிக்காமல் இருக்க உடனே தீயை அணைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் மர்ம நபர்கள் இப்பகுதியில் அதிகம் உள்ளதால் அவர்கள் இது போன்ற செய்திகள் ஈடுபட்டு இருப்பதாக அப்பகுதி வழியாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கவும், தனியார் கழிவு நீர்   வாகனத்திற்கு தடை விதிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News