காஞ்சிபுரம் 36 -வது வார்டில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல்

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 36-வது வார்டில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

Update: 2022-06-27 08:30 GMT

காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  காஞ்சிபுரம் மாநகராட்சி 36 வது அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்  தற்கொலை செய்து கொண்டதால் இந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது .

இப்போது தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 வார்டுக்கான அதிகாரியாக மாநகராட்சி பொறியாளர் நியமிக்கப்பட்டு வேட்புமனு பெறப்பட்டது.

இந்நிலையில்  இந்த வார்டு பகுதியில் முன்னாள் நகர்மன்ற  உறுப்பினர் சுப்பு என்கிற சுப்புராயன்,  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் ,  12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

படவிளக்கம் : காஞ்சிபுரம் மாநகராட்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்த 36-வது வார்டு காண தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் சுப்புராயன் வேட்புமனு தாக்கல் செய்தபோது.

Tags:    

Similar News