காஞ்சிபுரத்தில் பிறந்த நாளில் அண்ணா குடிலை மறந்த தி.மு.க.வினர்

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரத்தில் அண்ணாவின் குடிலை தி.மு.க.வினர் மறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-09-15 05:15 GMT

காஞ்சிபுரம்  டி.ஐ.ஜி. அலுவலகம் எதிரே உள்ள அண்ணா குடில். 

Kanchipuram News in Tamil -முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995ம்வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நூலகம், மூலிகைப் பண்ணை, முதியோர் இல்லம் நடத்தி வந்தனர்.

அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடில் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினரான மலர்வண்ணன், சௌமியா, இளவரசி ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

அரசு குத்தகை நிலத்தை அண்ணாவின் குடும்பத்தினர் பராமரித்து வந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்தது. அந்த 7 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க.வினர் அபகரிக்க முயல்வதாகவும் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தி மீண்டும் அண்ணாவின் வாரிசுகளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அப்போதைய காஞ்சிபுரம்்  கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன்பின் இதில் பிரச்சினை முடிவிற்கு வந்த பின்பு அந்த அண்ணா சிலை வைக்கப்பட்ட குடில் இடம் முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ளது. மேலும் அண்ணாவின் சிலை பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் நிலையில்,  அவரது சிலையினையும் , அவர் நினைவாக வழங்கப்பட்ட இடத்தையும் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News