முதல்வர் நிவாரண நிதிக்கு மாவட்ட கவுன்சிலர் பொற் கொடி செல்வராஜ் ரூ 25ஆயிரம் நிதி வழங்கல்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் மலர் கொடி செல்வராஜ் ரூபாய் 25 ஆயிரம் நிதியை கலெக்டர் ஆர்த்தியிடம் வழங்கினார்

Update: 2021-11-15 07:30 GMT

முதலமைச்சர் பொதுநல நிவாரண நிதிக்கு ரூ 25 ஆயிரம் வழங்கிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பொற்கொடி செல்வராஜ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சியின் எட்டாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை கட்சிகளை சார்ந்த  மலர்கொடி செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகளில் தங்கியுள்ள பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மூன்று வேலைகளையும் உணவு வழங்குவது,  இது மட்டுமில்லாமல் அம்மா உணவகத்தில் இலவச உணவும் மூன்று வேளையும்  தமிழக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கொடி செல்வராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தியை சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் நன்கொடை அளித்தார்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் தமிழக முதல்வருக்கு தான் சார்ந்த விடுதலை கட்சி சார்பாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு  வழங்கியதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News