ஆகஸ்ட் 15 கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்: மநீம கலெக்டரிடம் கோரிக்கை

ஆகஸ்ட் 15ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மநீம கட்சி கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-08-02 07:45 GMT

பைல் படம்

இந்தியா முழுவதும் சுதந்திர தினம்,  குடியரசு தினம்,  காந்தி பிறந்த நாள் உள்ளிட்ட நான்கு நாட்கள் அனைத்து கிராமங்களிலும் கிராம வளர்ச்சி குறித்து பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதை வரும் காலங்களில் செயல்படுத்த திட்டமிடும் கூட்டமான கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் குறித்து அதிகளவில் மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் அதுமட்டுமல்லாமல் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியனறு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 243 மற்றும் தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 இல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளில் படி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் .

கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுவதால் ஊராட்சியின் வரவு செலவு தணிக்கை அறிக்கை ஆகியவைகளை மக்கள் பார்வையிடவும்,  கிராம நலன் கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் முறையாக தீர்மானங்களாக பதிவு செய்யப்படும் எனவும் கிராம சபை நிகழ்வுகள ஒளிப்பதிவு செய்ய அனுமதித்தல்  உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் வட மேற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையிலான மக்கள் நீதி மைய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து  மனுவை அளித்தனர்.


Tags:    

Similar News